போராளி – திரை விமர்சனம்
‘போராளி’ -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த ‘போராளி’. காரணம் இதற்க்கு முன் இவர்கள் ‘நாடோடிகள்’ மூலம் கொடுத்த வெற்றி தான்.
சசிகுமாரும்(குமரன்), அல்லரி நரேஷும்(நல்லவன்) சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னைக்கு வருகின்றனர். இங்கு அல்லரி நரேஷின் நண்பனாக வரும் கஞ்சா கருப்புவுடன் தங்குகின்றனர். பின்பு வேலை தேடி அலையும் நேரத்தில் இருவருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் நிவேதா(தமிழ் செல்வி) மீது அல்லரி நரேஷிற்க்கு காதல் ஏற்படுகிறது.
சசிகுமார் குரூப் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டு பகுதியில் சுவாதி(பாரதி)யின் குடும்பம் தங்கியிருக்கிறது. சசிகுமாரும், சுவாதியும் ஆரம்ப சந்திப்புகளில்...